Sunday, 1 February 2015

கீபோர்டு புதிது!


ஸ்மார்ட் போனிலும் டேப்லட்டிலும் ஆயிரம்தான் வசதிகள் இருந்தாலும் ஸ்டேடஸ் அப்டேட்கள் தாண்டி அதிகமாக டைப் செய்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் கீபோர்ட் பயன்படுத்துவதில் சில அசவுகரியங்கள் உள்ளன. இதற்குத் தீர்வாகப் புதிய கீபோர்டை வேடூல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் பிளேட் எனும் இந்த கீபோர்டு பழைய ஐபோனில் பாதி அளவுக்குத் தான் இருக்கிறது. அதனால் பாக்கெட்டில்கூட வைத்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் பழக்கமான QWERTY கீபோர்ட், அழகாக மூன்று பகுதிகளாகப் பிரித்து முழு கீபோர்டாக இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் மல்டி டச் வசதி கொண்ட நான்கு ஸ்மார்ட் கீ உள்ளன. டேப்லட் அல்லது ஸ்மார்ட் போன் முன் பிரித்து இணைத்து வைத்துவிட்டு வழக்கமான கீபோர்டில் டைப் செய்வது போல வார்த்தைகளை அடிக்கலாம். எழுத்துகள் தவிர மற்ற கீபோர்ட் வசதிகளை மல்டி டச் வசதியில் தேர்வு செய்து கொள்ளலாம். நிமிடத்தில் 100 வார்த்தை வரை டைப் செய்ய முடியும் என்று இதற்கான காட்சி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடூல்ஸ் இணையதளத்தில் இந்த கீபோர்ட் பின்னே உள்ள தொழில் நுட்பம் அது செயல்படும் விதம் பற்றி எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய கீபோர்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக டைப் ரைட்டர் காலத்தில் இருந்து டச் நுட்பம் வரையிலான எழுத்து முறை பற்றிய சுவாரஸ்யமான வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கீபோர்ட் நுட்பம் அதன் எதிர்பார்ப்பை உண்மையிலேயே பூர்த்தி செய்து வெற்றி பெற்றால் அப்படியே நம்மூரில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்போம். தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் டைப் செய்யும் வசதியுடன் தான்.


Related Posts:

  • கீபோர்டு புதிது! ஸ்மார்ட் போனிலும் டேப்லட்டிலும் ஆயிரம்தான் வசதிகள் இருந்தாலும் ஸ்டேடஸ் அப்டேட்கள் தாண்டி அதிகமாக டைப் செய்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் கீபோர்ட் பயன்படுத்துவதில் சில அசவுகரியங்கள் உள்ளன. இதற்குத் தீர்வாகப் புதிய கீபோர்டை … Read More
  • தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம் இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிக… Read More
  • நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள புதுமையான வசதி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள புதுமையான வசதியை ஜெர்மனி நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. போனை சார்ஜ் செய்ய மின்சாரமோ, பிளக் பாயிண்டோ தேவையில்லை. சிகரெட் லைட்டர் போல இருக்… Read More
  • வாட்ஸ் சிம் உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது. இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் … Read More

0 comments:

Post a Comment