இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும் எண்ணத்தில் Facebook, Google போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரிக்க., இலவச இணைய தொடர்பு சேவையை வழங்க பல முயற்சிகள் செய்து வருகின்றன.
இணைய தொடர்பு அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் / நிறுவனங்கள் பல இணைய சேவைகளை பயன்படுத்துவார்கள் என்பது இவர்கள் கணக்கு. இதுபற்றி சில கட்டுரைகள் டெக் தமிழ் தளத்தில் ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.
தற்போது., Microsoft நிறுவனம் புதுமையான முறையில் இலவச அல்லது மிகக் குறைந்த விலையிலான (மாதம் 140 ரூபாய்- 4mbps வேகம்) இணைய தொடர்பு சேவையை வழங்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
தூர்தர்சன் தொலைக்காட்சி சேவை பயன்படுத்தும் அலைகற்றையில் “White Space” எனும் ஒரு பகுதி 200-300 MHz பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த White Space என்பது காற்றில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கும் அடுத்த தொலைக்காட்சி சேனலுக்கும் ஒதுக்கப்பட்ட அலைகற்றைகளுக்கு இடையே உள்ள பயன்படுத்தக் கூடிய வெற்றிடம்.
இதை நீங்கள் ஒரு பெரிய WiFi பகுதியாக உருவகப்படுத்திக் கொள்ளலாம். சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு மாபெரும் WiFi Zone போல் இருக்கும். ஒருமுறை இதற்கான கட்டமைப்பை நிறுவிவிட்டால் போதும். அந்த 10 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைவருக்கும் இலவசமாக இணைய சேவை வழங்கலாம். இந்தியா முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் இதை நிறுவும் போது , முழு இந்தியாவும் இணைய தொடர்பில் வந்துவிடும்.
இந்த மாபெரும் திட்டம் இந்திய பிரதமர் மோடியின் Digital India திட்டத்தில் Microsoftஉடன் இணைந்து செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
ஏற்கனவே., கானா , தென் ஆப்ரிக்கா , ஐக்கிய அரசு (UK) நாடுகளில் பயன்படுத்தபட்டுள்ள இந்த சேவை, இந்தியா போன்ற மிகப் பெரிய பரப்பளவுள்ள நாட்டில் செய்து பார்ப்பது இதுவே முதல் முறை. 2018இல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
அரசு கேபிள் tv வழியே ” அம்மா இணையம் ” வருவதாக தெரிகிறது., எங்கள் ஏரியா கேபிள் அண்ணாச்சி கிட்ட நம்ம வீட்டுக்கு சீக்கிரம் குடுங்கனு சொல்லி வைச்சுருக்கேன்.
0 comments:
Post a Comment