• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Saturday 7 February 2015

What do "BDRip", "DVDRip" and other mean on Torrent titles?


This is to describe what kind of source has been used to encode the release.

CAM

A cam is a theater rip usually done with a digital video camera. A mini tripod is sometimes used, but a lot of the time this wont be possible, so the camera make shake. Also seating placement isn’t always idle, and it might be filmed from an angle.

If cropped properly, this is hard to tell unless there’s text on the screen, but a lot of times these are left with triangular borders on the top and bottom of the screen. Sound is taken from the onboard microphone of the camera, and especially in comedies, laughter can often be heard during the film. Due to these factors picture and sound quality are usually quite poor, but sometimes we’re lucky, and the theater will be fairly empty and a fairly clear signal will be heard.

TELESYNC (TS)

A telesync is the same spec as a CAM except it uses an external audio source (most likely an audio jack in the chair for hard of hearing people). A direct audio source does not ensure a good quality audio source, as a lot of background noise can interfere.

A lot of the times a telesync is filmed in an empty cinema or from the projection booth with a professional camera, giving a better picture quality. Quality ranges drastically, check the sample before downloading the full release. A high percentage of Telesyncs are CAMs that have been mislabeled.

TELECINE (TC)

A telecine machine copies the film digitally from the reels. Sound and picture should be very good, but due to the equipment involved and cost telecines are fairly uncommon. Generally the film will be in correct aspect ratio, although 4:3 telecines have existed.  TC should not be confused with TimeCode , which is a visible counter on screen throughout the film.

SCREENER (SCR)

A pre VHS tape, sent to rental stores, and various other places for promotional use. A screener is supplied on a VHS tape, and is usually in a 4:3 (full screen) a/r, although letterboxed screeners are sometimes found. The main draw back is a “ticker” (a message that scrolls past at the bottom of the screen, with the copyright and anti-copy telephone number). Also, if the tape contains any serial numbers, or any other markings that could lead to the source of the tape, these will have to be blocked, usually with a black mark over the section.

This is sometimes only for a few seconds, but unfortunately on some copies this will last for the entire film, and some can be quite big. Depending on the equipment used, screener quality can range from excellent if done from a MASTER copy, to very poor if done on an old VHS recorder thru poor capture equipment on a copied tape. Most screeners are transferred to VCD, but a few attempts at SVCD have occurred, some looking better than others.

DVD-SCREENER (DVDscr)

Same premise as a screener, but transferred off a DVD. Usually letterbox , but without the extras that a DVD retail would contain. The ticker is not usually in the black bars, and will disrupt the viewing.

If the ripper has any skill, a DVDscr should be very good. Usually transferred to SVCD or DivX/XviD.

DVDRip

A copy of the final released DVD. If possible this is released PRE retail , should be excellent quality. DVDrips are released in SVCD and DivX/XviD.

VHSRip

Transferred off a retail VHS, mainly skating/sports videos and XXX releases.

TVRip

TV episode that is either from Network (capped using digital cable/satellite boxes are preferable) or PRE-AIR from satellite feeds sending the program around to networks a few days earlier (do not contain “dogs” but sometimes have flickers etc) Some programs such as WWF Raw Is War contain extra parts, and the “dark matches” and camera/commentary tests are included on the rips.

PDTV is capped from a digital TV PCI card, generally giving the best results, and groups tend to release in SVCD for these. VCD/SVCD/DivX/XviD rips are all supported by the TV scene.

WORKPRINT (WP)

A workprint is a copy of the film that has not been finished. It can be missing scenes, music, and quality can range from excellent to very poor. Some WPs are very different from the final print (Men In Black is missing all the aliens, and has actors in their places) and others can contain extra scenes (Jay and Silent Bob).

WPs can be nice additions to the collection once a good quality final has been obtained.

DivX Re-Enc

A DivX re-enc is a film that has been taken from its original VCD source, and re-encoded into a small DivX file. Most commonly found on file sharers, these are usually labeled something like Film.Name.Group(1of2) etc. Common groups are SMR and TND.

These aren’t really worth downloading, unless you’re that unsure about a film u only want a 200mb copy of it. Generally avoid.

Watermarks

A lot of films come from Asian Silvers/PDVD (see below) and these are tagged by the people responsible. Usually with a letter/initials or a little logo, generally in one of the corners. Most famous are the “Z” “A” and “Globe” watermarks.

Asian Silvers / PDVD

These are films put out by eastern bootleggers, and these are usually bought by some groups to put out as their own. Silvers are very cheap and easily available in a lot of countries, and its easy to put out a release, which is why there are so many in the scene at the moment, mainly from smaller groups who don’t last more than a few releases.

PDVDs are the same thing pressed onto a DVD. They have removable subtitles, and the quality is usually better than the silvers. These are ripped like a normal DVD, but usually released as VCD.

BRRIP and BDRIP

Blue-Ray BRRIP’s and BDRIP’s have been around for quite some time. These two are remarkable in the sense that they’re compatible with standalone home DVD players (with DivX/XviD support), XBOX 360, PS3, and other external peripherals.

These BRRip XviD and BDRip XviD files allow anyone to burn HD-quality Blu-Ray ripped movies on regular DVD media, and playback on most conventional DVD players – without the headaches of re-encoding or DVD authoring. There’s just one catch – you’ll likely need an HDTV to take full advantage of the superior video quality.

BRRip = An XviD encode from a Blu-Ray release (i.e. a 1080p *.mkv file).

BDRip = An XviD encode directly from a source Blu-Ray disk.

NOTE:

While both BRRips and BDRips are superior to DVDRips, they are normally released in 720p resolution, since standalone DivX (*.avi) players do not support anything higher than this anyways. They should not be confused with genuine Blu-Ray rips in 1080p, which are usually done in native Blu-Ray files, or as H.264 *.mkv files.

Wednesday 4 February 2015

தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்





இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும் எண்ணத்தில் Facebook, Google போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரிக்க., இலவச இணைய தொடர்பு சேவையை வழங்க பல முயற்சிகள் செய்து வருகின்றன.

இணைய தொடர்பு அனைவருக்கும் அ​னைத்து இடங்களிலும் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் / நிறுவனங்கள் பல இணைய சேவைகளை பயன்படுத்துவார்கள் என்பது இவர்கள் கணக்கு. இதுபற்றி சில கட்டுரைகள் டெக் தமிழ் தளத்தில் ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.

தற்போது., Microsoft நிறுவனம் புதுமையான முறையில் இலவச அல்லது மிகக் குறைந்த விலையிலான (மாதம் 140 ரூபாய்- 4mbps வேகம்) இணைய தொடர்பு சேவையை வழங்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

தூர்தர்சன் தொலைக்காட்சி சேவை பயன்படுத்தும் அலைகற்றையில் “White Space” எனும் ஒரு பகுதி 200-300 MHz பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த White Space என்பது காற்றில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கும் அடுத்த தொலைக்காட்சி சேனலுக்கும் ஒதுக்கப்பட்ட அலைகற்றைகளுக்கு இடையே உள்ள பயன்படுத்தக் கூடிய வெற்றிடம்.

இதை நீங்கள் ஒரு பெரிய WiFi பகுதியாக உருவகப்படுத்திக் கொள்ளலாம். சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு மாபெரும் WiFi Zone போல் இருக்கும். ஒருமுறை இதற்கான கட்டமைப்பை நிறுவிவிட்டால் போதும்.  அந்த 10 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைவருக்கும் இலவசமாக இணைய சேவை வழங்கலாம். இந்தியா முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் இதை நிறுவும் போது , முழு இந்தியாவும் இணைய தொடர்பில் வந்துவிடும்.

இந்த மாபெரும் திட்டம் இந்திய பிரதமர் மோடியின் Digital India திட்டத்தில் Microsoftஉடன் இணைந்து செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஏற்கனவே., கானா , தென் ஆப்ரிக்கா , ஐக்கிய அரசு (UK) நாடுகளில் பயன்படுத்தபட்டுள்ள இந்த சேவை, இந்தியா போன்ற மிகப் பெரிய பரப்பளவுள்ள நாட்டில் செய்து பார்ப்பது இதுவே முதல் முறை. 2018இல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

அரசு கேபிள் tv வழியே ” அம்மா இணையம் ” வருவதாக தெரிகிறது., எங்கள் ஏரியா கேபிள் அண்ணாச்சி கிட்ட நம்ம வீட்டுக்கு சீக்கிரம் குடுங்கனு சொல்லி வைச்சுருக்கேன்.

வாட்ஸ் சிம்


உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது.

இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையைப் பெற்றுத் தருகிறது.

இந்த சிம் கார்டின் விலை 10 யூரோ. மாதக் கட்டணம் அல்லது குறிப்பிட்ட காலக்கெடு என இந்த சிம் கார்டிற்குக் கட்டுப்பாடு இல்லை.

இந்த வாட் சிம் கார்டை வடிவமைத்து, சேவைக் கட்டமைப்பினை வழங்குவது 'ஸீரோ மொபைல்' என்னும் இத்தாலிய தொலை தொடர்பு நிறுவனமாகும். மெசேஜ் அனுப்ப, இது வாட்ஸ் அப் போலவே இயங்குகிறது. ஆனால், படங்கள் அனுப்ப, பாடல்களை இணைத்து அனுப்ப, குரல் ஒலியைப் பதிவு செய்து அனுப்ப, கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மொபைல் சாதனங்கள் வழி மெசேஜ் அனுப்ப வாட்ஸ் அப் மிகச் சிறந்த அப்ளிகேஷனாக உள்ளது. இதனுடைய ஒரே கட்டுப்பாடு, டேட்டா தொடர்பு தான். குறிப்பாக நீங்கள் பயணத்தில் இருக்கையில், ரோமிங் கட்டணம் அதிகமாக இருக்கும்.

அதனால், வாட்ஸ் அப் வழி செய்தி அனுப்புவது செலவு அதிகம் கொள்ளும் இனமாக அமைந்துவிடும். மேலும், அனைத்து இடங்களிலும் வை பி வசதி கிடைக்கும் என நாம் உறுதி செய்திட முடியாது. மேலும், வை பி இலவசமாகவும் கிடைக்காது.

இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழி குறித்து சிந்திக்கையில், இந்த அப்ளிகேஷன் மற்றும் சிம் கார்ட் யோசனை வந்ததாக, ஸீரோ மொபைல்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Tuesday 3 February 2015

விண்டோஸ் 10 - ன் 10 சிறப்பு அம்சங்கள்


"விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்” என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார்.

”விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் சிஸ்டத்தை தேர்ந்தெடுத்து, அதனை நேசிக்கும் மக்களை நோக்கி நாம் நகர்வோம்” என்று விண்டோஸ் சிஸ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி அன்பு பெருக்கோடு உரையாற்றினார், நாதெள்ளா. நம் வாழ்க்கை முறையையும், சிந்தனையையும் மாற்றி அமைத்த விண்டோஸ் இயக்கம், இனி, நம் வாழ்வின் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும் பணியை, விண்டோஸ் 10 இயக்கத்துடன் தொடங்குகிறது. இந்த உலகிற்கு இன்னும் விண்டோஸ் ஒரு கட்டாயத் தேவையாக இருக்கும்; அது இல்லாமல் உலகு இயங்காது என்பதனை நிரூபிக்கும் வகையில், விண்டோஸ் 10 வருகிறது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவால் ஆகும். அதனுடைய வெற்றியில் தான், அந்நிறுவனத்தின் எதிர்காலமே உள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சரியாகவே மேற்கொண்டுள்ளன என்று கூறலாம். பத்தாண்டுகளுக்கு முன்னால், அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும், பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ் 10 இயங்கும் எனக் கூறலாம்.

ஏற்கனவே வெளியான தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்தது. தற்போதைய, நுகர்வோருக்கான சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பினைப் பல லட்சம் பேர் சோதனை செய்து தங்கள் பின்னூட்டங்களைத் தந்தனர். இவர்களை முறைப்படுத்துவதற்காகவே, 'விண்டோஸ் இன்சைடர் திட்டம்' ("insiders")என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் சென்ற ஆண்டில் தொடங்கி, இன்னும் இயக்கிக் கொண்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமையின், சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

இலவசமாய்ப் பெறலாம்:

முதலாவதாக, பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ் 10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிடலாம். கூடுதலாக, விண்டோஸ் 8.1 பயன்படுத்தும் விண்டோஸ் போன்களும், இதே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்யப்படும்.
மைக்ரோசாப்ட், 'விண்டோஸ்' என்பது இனி ஒரு சேவையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

ஒரே சிஸ்டம்:

ஆப்பிள், ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தினை தன் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகவும், ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை மொபைல் சாதனங்களுக்காக எனவும் பிரித்து வைத்து இயக்கி வருகிறது. ஆனால், முதன் முதலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் முதல் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் இயைவானதாகத் தர இருக்கிறது. இவற்றில் இயங்கும் இடை முகங்களும் (Interface) ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைய இருக்கின்றன. இதனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10ல் தொடங்கிய வேலையை, போனில் தொடரலாம். அதே போல, போனில் தொடங்கிய வேலையை, டேப்ளட் பி.சி.யில் இயக்கலாம். அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வரும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் வெகு காலமாக எண்ணி வந்து, இப்போது ஈடேற்றியுள்ளது.

இதன் மூலம், மொபைல் கம்ப்யூட்டிங் உலகில் கோலோச்சி வரும், கூகுள் ஆதரிக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சிஸ்டங்களின் வாடிக்கையாளர்களைத் தன் பிடிக்குள், விண்டோஸ் சிஸ்டம் மூலம், தன் குடைக்குள் கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட். இதற்காகவே, உலக அளவில், தன் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் 150 கோடி பேர்களுக்கு, புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற அனுமதித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமில்லாமல், வேறு பல சாதனங்களையும் இயக்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ஹப் (Surface Hub,) மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகியவையும் இதே சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கிறது. இதனால், விண்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஸ்டோர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. வை பி இணைப்பு மூலம், எக்ஸ் பாக்ஸில் உள்ளனவற்றை, கம்ப்யூட்டரில் இயக்கலாம். எதிர் வழியில், மாற்றியும் இயக்கலாம்.

விண்டோஸ் 10 சிஸ்டம் கட்டமைப்பு, புரோகிராம்களை வடிவமைக்கும் டெவலப்பர்கள், ஒரே நேரத்தில், ஸ்மார்ட் போன், டேப்ளட், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்குத் தங்கள் அப்ளிகேஷன்களை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து சாதனங்களையும் இயக்கும் ஒரே சிஸ்டமாக, மைக்ரோசாப்டின் விண்டோஸ் இருக்கப் போகிறது என இனி அடித்துச் சொல்லலாம்.

ஹலோ கார்டனா!:

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ள கார்டனா (Cortana digital assistant) விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார்டனா இப்போது முழுமையாக, செறிவான திறன் பெற்றுள்ளது. மேப்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நம் டிஜிட்டல் உதவியாளராகச் செயல்படும். நாம் டைப் செய்தோ, அல்லது குரல் வழியாகவோ, பைல் ஒன்றைத் தேடலாம். கார்டனா, இவற்றிலிருந்து நம்மைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், நமக்கு சில மேம்படுத்தப்பட்ட விஷயங்களைப் பரிந்துரைகளாகத் தரும்.

ஸ்பார்டன் பிரவுசர்:

தன் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து வழங்குவதுடன், புதுமையான பிரவுசராக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், ஸ்பார்டன் பிரவுசரை, நவீன தொழில் நுட்பத்தில், புதிய கூடுதல் வசதிகளுடன் மைக்ரோசாப்ட் வடிவமைத்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளம் இதில் குறிப்பிடப்படுகையில், அந்த இணையதளப் பக்கத்தினை, அதனுடனான தொடர்புகளுடன் உறைய வைத்து காட்டுகிறது.

இதனால், தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, உருவாக்கி, மேம்படுத்தித் தந்த இன்டர்நெட் பிரவுசரை மைக்ரோசாப்ட் விட்டுவிடவில்லை. அதனையும் தன் சிஸ்டத்துடன் தருகிறது. ஆனால், இனி வருங்காலத்தில், இதற்கும் எக்ஸ்பிக்கு நேர்ந்த கதி ஏற்படலாம். முற்றிலும் மறைக்க, மறுக்கப்படலாம்.

மொபைல் போனுக்கும் விண்டோஸ் 10:

போனில் விண்டோஸ் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய வகையில் போட்டோ, ஸ்கைப், ஆபீஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் மாற்றப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. கீ போர்டினை மாற்றி அமைக்கும் வகையில் தருகிறது. மெசேஜ் அனுப்ப, குரல் வழியினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம். ஸ்கைப் அப்ளிகேஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், மெசேஜ்கள் தாமாகவே, ஸ்கைப் மூலம் அனுப்பப்படுகின்றன. ஸ்கைப், டயலருடன் இணைக்கப்படுகிறது. போனில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான ஆபீஸ் அப்ளிகேஷம் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களுடன் கிடைக்கின்றன.

விளையாடும் வசதி:

போனில் இயங்கும் விண்டோஸ் 10, கேம் விளையாடுவதற்கான வசதிகளை மேம்படுத்துகிறது. இதனுடைய புதிய DirectX 12 அப்ளிகேஷன் புரோகிராமிங் மொழி, விளையாடுவதனை புதிய அனுபவமாகக் காட்டுகிறது.

எக்ஸ்பாக்ஸ்:

மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் (Xbox) அப்ளிகேஷனை, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்துள்ளது. அதே போல, விண்டோஸ் 10 எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலுடன் இணைக்கப்படுகிறது.

தொடரும் உறவு:

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, அதன் தொடரும் உறவு தான். ஆம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களைப் பயன்படுத்தியவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பயன்படுத்தும்போது, ஒரு தொடர்ச்சியினை உணர்வார்கள். ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்படுகிறது. அதே போல, விண்டோஸ் 8 பயனாளர்கள், அந்த சிஸ்டத்தில் விரும்பியவையும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்திற்கும் இசைவான இடைமுகத்தினை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் Continuum என அழைக்கிறது.

விண்டோஸ் 10, மவுஸ் மற்றும் கீ போர்டினை உணர்ந்தவுடன், தானாக, பழைய வகை விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் பட்டனுடன் காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் டெஸ்க்டாப்பில் பழகியவர்கள், இரண்டு வகையையும் இயக்கலாம். ஐகான்கள் புதிய உருவினைப் பெற்றுள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பெரிய அளவிலான ஐகான்களையும், பழைய ஸ்டார்ட் மெனுவுடன் இயங்குகையில், சிறிய அளவிலான ஐகான்களையும் பெற்று இயக்கலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அனைவராலும் விருப்பமில்லாமல் இயக்கப்பட்ட சார்ம்ஸ் மெனு (charms menu) விற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வலது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தால், புதிய நோட்டிபிகேஷன்ஸ் மெனு கிடைக்கிறது. இதில், பல அப்ளிகேஷன்களுக்கான இயக்க தொடக்கம் முடிவிற்கான விரைவாக இயங்கும் டாகிள் (quick-toggle) பட்டன்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் என்ற நிலைகளுக்கு மாறிக் கொள்ளலாம். வை பி மற்றும் பிற செட்டிங்ஸ் அமைப்புகளையும் இயக்கலாம். செட்டிங்ஸ் மெனுவும், கண்ட்ரோல் பேனலும் புதிய பிரிவில் தரப்படுகின்றன.

விரைவான வேகம்!:

மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை வழங்கும் போதெல்லாம், அது மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறதென்றும், அதனால், சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்றும் குற்றச் சாட்டுகள் அடுக்கப்பட்டன. அது உண்மையே. அதனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 7 முதல், இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொண்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மிகச் சிறியதாக அமைத்து, வேகமாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொண்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், இந்த இலக்கு அழகாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்டோஸ் 8.1 இயக்க வேகத்தைக் காட்டிலும் மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ்.எக்ஸ். யோஸ்மைட் சிஸ்டத்தைக் காட்டிலும் வேகமாக இயங்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்படுகிறது.

விண்டோஸ் 7 முதல் அதன் பின் வந்த அனைத்து சிஸ்டங்கள் இயங்கிய கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 இயங்கும். இதனால், விண்டோஸ் 10 இயக்க, ஹார்ட்வேர் உயர்த்தப்பட வேண்டும் என்ற செலவு பயம் இல்லை.

அசையாத பாதுகாப்பு:

இதுவரை வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது விண்டோஸ் 10 என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒன் ட்ரைவில் பல கட்டமைப்பு மாறுதல்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒன் ட்ரைவில் சேவ் செய்யப்படும் பைல்கள் போட்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மியூசிக் அப்ளிகேஷன்களில் இயக்கப்படும். மேலும், போட்டோக்களைப் பொறுத்தவரை டூப்ளிகேட் பைல்கள் தாமாகவே களையப்படும். மிச்சமிருக்கின்ற பைல்கள், மேம்படுத்தப்படும்.

புதிய நவீன தொழில் நுட்பம்:

மேலே கூறப்பட்டவை அனைத்தும் நாம் ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்று வந்தவற்றின் புதிய மாற்றங்கள். இவற்றுடன், முற்றிலும் புதிய பரிமாணங்கள் கொண்ட, நவீன தொழில் நுட்ப சங்கதிகளை, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தருகிறது. அந்த வகையில் முதலில் நாம் சந்திப்பது ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் சார்ந்த அப்ளிகேஷன்கள் ஆகும். உலகிலேயே முதன் முதலாக, ”ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் இயக்க மேடையை”, மைக்ரோசாப்ட் அமைக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள், முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைக்கலாம். இதற்கான தலை அணிகலனை மாட்டிக் கொண்டு, விண்டோஸ் 10 சிஸ்டம் வழங்கும் ஹோலோ லென்ஸ் தொழில் நுட்பத்துடன் இணைந்து, ஹோலோ கிராபிக் உருவங்களை, நம் நிஜ உலகில் உலவவிடலாம்.

இது குறித்து உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் நாதெள்ளா, “இனி ஹோலோகிராம் உருவங்கள், நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடும்” என்றார்.

விண் 10-எப்பொழுது எங்கு கிடைக்கும்?:

சென்ற அக்டோபர், 2014 முதல், விண்டோஸ் 10ன் தொழில் நுட்ப முன்னோட்ட பதிப்பு வெளியானது. அப்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன்சைடர் (Windows Insider) புரோகிராம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆர்வலர்களைப் பதியுமாறு கேட்டுக் கொண்டது. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, வரும் வாரங்களில் விண்டோஸ் 10 நுகர்வோர் சோதனைப் பதிப்பு பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.

மொபைல் போனில் பயன்படுத்துவதற்கான விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பு வரும் பிப்ரவரியில் கிடைக்கும்.

மொத்தமாகப் பயனாளர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேர்டில் பேக் அப் காப்பி செய்வது எப்படி


வேர்டில் பேக் அப் காப்பி:

வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா?

இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை வேர்ட் எடுப்பதே இல்லை. அதில் அந்த வசதி எல்லாம் இல்லை எனவும் பதிலளிக்கலாம்.

இதில் எது உண்மை?

வேர்டில் உருவாக்கப்படும் பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த செயல்பாட்டினை வேர்ட் தானாக, மாறா நிலையில் கொண்டிருக்க வில்லை. நாமாகத்தான் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டும். அது எப்படி
எனப் பார்க்கலாம்.

1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி வேர்ட் ஆப்ஷன்ஸ் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனுடைய பைல் டேப் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, அதன் பின்னர், ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.

2. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இங்கு கீழாக Save options என்பதனைக் காணும் வரை செல்லவும். டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Save என்ற ஆப்ஷனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டும் ஒன்றல்ல.

4. இங்கு Always Create Backup Copy என்பதில் கிளிக் செய்திடவும். செக் மார்க் ஒன்றை இதில் ஏற்படுத்தவௌம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதனை அடுத்து, உருவாக்கப்படும் டாகுமெண்ட் அனைத்திற்கும் பேக் அப் காப்பி அமைக்கப்படும்.

அதாவது, டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் சேவ் செய்திடுகையில், அதற்கு முந்தைய நிலையில் உள்ள டாகுமெண்ட், பேக் அப் காப்பியாக இருக்கும். ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போன நிலையில், இந்த பேக் அப் காப்பியினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பைலின் துணைப் பெயரினை ஒரிஜினல் பைலின் பெயராக மாற்றிக் கொள்ளலாம்.

மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.

2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Names என்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும்.

இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.

Monday 2 February 2015

What is XML?

XML (Extensible markup language) is all about describing data. Below is a XML which describes book store.
<?xml version=”1.0″ encoding=”ISO-8859-1″?>
<book>
<php>php by pcds infotech</php>
<java>Jave j2ee by pcds infotec</java>
An XML tag is not something predefined but it is something you have to define according to your needs. For instance in the above example of books all tags are defined according to business needs. The XML document is self explanatory, any one can easily understand looking at the XML data what exactly it means.

Sunday 1 February 2015

சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத வாகனம் - எலெக்ட்ரிக் கார்கோ பைக்

 எலெக்ட்ரிக் கார்கோ பைக்



சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் வாங்கவேண்டும் என்றால் விலை அதிகமாக இருக்கிறது என்கிற வருத்தம் இருக்கும். அந்த குறையை போக்கும் விதமாக வந்துள்ளது எலெக்ட்ரிக் கார்கோ பைக்.

ஜொகன்சன் என்கிற அமெரிக்க நிறுவனம் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் இருவருமே பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

கனவு பாரீஸ்!

2050ல் பாரீஸ் நகரம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது பிரான்ஸைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம். நகரின் பாரம்பர்யம் மாறாமல் பசுமை நகரமாக மாற்றுவது எப்படி என்கிறது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வரை படங்கள்.

இயற்கை வழியில் மின் உற்பத்தி, மழை நீர் சேகரிப்பு வசதி, நகரில் எங்கு பார்த்தாலும் பசுமை என மிக அழகான நகரமாக இருக்கிறது இந்த நிறுவனத்தின் கனவு. இதற்கு கனவு 2050 என்றும் பெயர் வைத்துள்ளனர்.

பேட்டரி டூத் பிரஷ்

தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்வில் அதன் ஆதிக்கம் அதிகரித்து கொண்டுதானிருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கவும் இப்போது நவீன தொழில்நுட்பத்தில் செயல்படும் பல் துலக்கியை (டூத் பிரஷ்) அறிமுகப்படுத்தியுள்ளது பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் அங்கமான ஓரல் பி.

இந்த பேட்டரியில் செயல்படும் பல் துலக்கி செல்போனின் புளூ டூத் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியச் சந்தையிலும் இது அறிமுகமாக உள்ளது. உங்கள் பல்லை எவ்வளவு நேரம் துலக்க வேண்டும், சரியாக துலக்குகிறீர்களா என்பதற்கான அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் பல் டாக்டரின் ஆலோசனையின்படி டவுன்லோட் செய்ய வேண்டும்.

மொபைலிலிருந்து வரும் கட்டளையின்படி இந்த பிரஷ் செயலாற்றும். இரவில் நீங்கள் பல் துலக்கிவிட்டேன் என்று பல் டாக்டரிடம் பொய் சொல்ல முடியாது. மொபைல் அப்ளிகேஷன் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

ஸ்கூட்டரா, பைக்கா?

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் பெரும்பாலும் இளைஞர்களை கவருவதில்லை. வேகமும் இருக்க வேண்டும், பார்த்த உடனே வடிவமைப்பும் ஈர்க்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் நிற்கும். இந்த குறைகளை களைந்தது பனிச்சறுக்கு மற்றும் சாகச விளையாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிபிஜி.

அதிலும் ஒரே நேரத்தில் பைக்காகவும் ஸ்கூட்ராகவும் மாற்றிக் கொள்ளக்கூடியதாகவும் இந்த மோட்டார் சைக்கிளை வடிவமைத்தது. மோட்டார் சைக்கிள் போலவே இருக்கும் இதன் முன் சக்கரத்தை தேவைக்கு ஏற்ப மடக்கிக் கொள்ள முடியும். இப்படி சக்கரத்தை மடக்கிய நிலையில் ஸ்கூட்டர் போலவும் ஓட்டிச் செல்லலாம். 

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள புதுமையான வசதி


நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள புதுமையான வசதியை ஜெர்மனி நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. போனை சார்ஜ் செய்ய மின்சாரமோ, பிளக் பாயிண்டோ தேவையில்லை. சிகரெட் லைட்டர் போல இருக்கிறது இந்த பாக்கெட் சார்ஜர். இந்த லைட்டர் உள்ளே இருக்கும் எரிவாயுவைக் கொண்டு மெல்லிய மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் தான் ஸ்மார்ட் போன் பேட்டரியை சார்ஜ் செய்கிறது.கிராப்ட்ரெக் எனும் இந்த சார்ஜரை பாக்கெட்டில் இருக்கும் மின்நிலையம் என ஜெர்மனி நிறுவனமான இஜெல்லிரான் வர்ணிக்கிறது.

லைட்டரில் பயன்படுத்தப்படும் அதே எரிவாயுவை இந்த சார்ஜரில் உள்ள செல் மின்சக்தியாக மாற்றிவிடுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு முறை எரிபொருள் கொண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட 11 சாதனங்களை சார்ஜ் செய்யலாம். மூன்று நிமிடங்களில் மீண்டும் நிரப்பி விடலாம். இதன் முன்னோட்ட மாதிரி இப்போது தயாராகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இணையம் மூலம் நிதி திரட்டும் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் இதற்காக ஆதரவு திரட்டும் பக்கத்தையும் அமைத்துள்ளது. 

கீபோர்டு புதிது!


ஸ்மார்ட் போனிலும் டேப்லட்டிலும் ஆயிரம்தான் வசதிகள் இருந்தாலும் ஸ்டேடஸ் அப்டேட்கள் தாண்டி அதிகமாக டைப் செய்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் கீபோர்ட் பயன்படுத்துவதில் சில அசவுகரியங்கள் உள்ளன. இதற்குத் தீர்வாகப் புதிய கீபோர்டை வேடூல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் பிளேட் எனும் இந்த கீபோர்டு பழைய ஐபோனில் பாதி அளவுக்குத் தான் இருக்கிறது. அதனால் பாக்கெட்டில்கூட வைத்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் பழக்கமான QWERTY கீபோர்ட், அழகாக மூன்று பகுதிகளாகப் பிரித்து முழு கீபோர்டாக இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் மல்டி டச் வசதி கொண்ட நான்கு ஸ்மார்ட் கீ உள்ளன. டேப்லட் அல்லது ஸ்மார்ட் போன் முன் பிரித்து இணைத்து வைத்துவிட்டு வழக்கமான கீபோர்டில் டைப் செய்வது போல வார்த்தைகளை அடிக்கலாம். எழுத்துகள் தவிர மற்ற கீபோர்ட் வசதிகளை மல்டி டச் வசதியில் தேர்வு செய்து கொள்ளலாம். நிமிடத்தில் 100 வார்த்தை வரை டைப் செய்ய முடியும் என்று இதற்கான காட்சி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடூல்ஸ் இணையதளத்தில் இந்த கீபோர்ட் பின்னே உள்ள தொழில் நுட்பம் அது செயல்படும் விதம் பற்றி எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய கீபோர்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக டைப் ரைட்டர் காலத்தில் இருந்து டச் நுட்பம் வரையிலான எழுத்து முறை பற்றிய சுவாரஸ்யமான வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கீபோர்ட் நுட்பம் அதன் எதிர்பார்ப்பை உண்மையிலேயே பூர்த்தி செய்து வெற்றி பெற்றால் அப்படியே நம்மூரில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்போம். தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் டைப் செய்யும் வசதியுடன் தான்.


Tuesday 27 January 2015

MS Excel - Transpose Rows And Columns

If you want to flip the rows and columns in a table, follow the steps.
  1. Select a table that you want to transpose. 1
  2. Press Ctrl + C to copy the table.
  3. Move the cursor to a cell in a blank part of your worksheet.
  4. On the Home tab, click the down arrow below the Paste icon.
  5. Click the Transpose1
  6. Output looks like 1

Monday 26 January 2015

MS Excel : Excel Operators along with their Function and Examples

Excel Operators along with their Function and Examples
Type Operator Description Example
Arithmetic + Adds the values =A2+B2+D2
 -  Performs subtraction  = A2 – B2
 /  Performs Division  =A5/D7
 *  Multiplies the values  =B5*D8
% Divides the value by 100 =D9%
 ^  Exponentiation  =B5^5
 Single Text  &  Connects different entries to produce one continuous entry  =B4&” “&C6
 Reference , (comma)  It combines multiple references into one reference  =SUM(A5,B8:C11,D15)
 : (colon)  Defines the selected range
space Evaluates cells that are common in two references =SUM(A5:A8 A5:D8)
Comparison > Greater than =A5>B5
< Less than =A5<B6
= Equates the values and create links between cells =A5=B7
>= Greater than or equal to =A5>=B5
<= Less than or equal to =A5<=B6
<> Not equal to =A5<>B7

MS Excel : Order of Operator Precedence in Excel



Order of Operator Precedence in Excel
Operator Description Precedence
- Negation 1
% Percentage 2
^ Exponentiation 3
* and / Multiplication and Division 4
+ and - Addition and Subtraction 5
& Ampersand/ Concatenation operator 6
=, <, >, <=, >=, <> Comparison Operators 7


MS Excel – Formula : Repeat Characters

Description:

Repeats text a given number of times.

Syntex:

= REPT(text, number_times)
The REPT function syntax has the following arguments:
  • Text    Required. The text you want to repeat.
  • Number_times    Required. A positive number specifying the number of times to repeat text.

Example:

1

Points to remember:


  • Use REPT to fill a cell with a number of instances of a text string.
  • If you want to repeat a text value or any characters in it, you can apply the REPT function to do that.
  • It repeats the values as many times as specified in the formula.
  • If number_times is 0 (zero), REPT returns “” (empty text).
  • If number_times is not an integer, it is truncated.
  • The result of the REPT function cannot be longer than 32,767 characters, or REPT returns #VALUE!.

How to import bookmarks from firefox to chrome

When you want import bookmarks from firefox to chrome, try the following steps,
  1. Close Mozilla Firefox browsers.
  2. Open Google Chrome.
  3. Click the Chrome menu 1  on the browser toolbar.
  4. Select Bookmarks.
  5. Click Import bookmark and settings.
  6. In the “Import bookmarks and settings” dialog that appears, select the application that contains the settings you’d like to import. 1
  7. Click Import.

Note:

  • If you already have bookmarks in Google Chrome, the imported bookmarks appear in the “Other bookmarks” folder at the end of the bookmarks bar.